இதற்கு பிறகு மோடிக்கு முகம் சுருங்கிவிட்டது – ராகுல் காந்தி

455

பாராளுமன்றத்துக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முகம் சுருங்கி காணப்படுகிறது.

அவர் பேட்டிகளின் போது ஒருவித தயக்கத்தை வெளிப்படுத்துகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மத்திய பிரதேசத்தின் திகம்கர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பாராளுமன்றத்துக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முகம் சுருங்கி காணப்படுகிறது. அவர் பேட்டிகளின் போது ஒருவித தயக்கத்தை வெளிப்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார்.

ரபேல் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய ராகுல் காந்தி, இந்திய விமானப்படையிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்து அம்பானியின் பையில் வைத்துள்ளதாக மோடி மீது குற்றம் சாட்டினார்.

சுமார் 15 பேரின் நலனுக்காக பிரதமர் மோடி நிதி ஒதுக்குவதாகவும், ஆனால் 25 கோடி மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of