மோடி படம் வெளியிடத் தடை! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

613

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

இந்த படம் நாளை திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தனர். இதனால் தொண்டர்களும் ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர். 23 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.

எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்தன. இதே கோரிக்கையை முன்வைத்து டெல்லி, மும்பை ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மும்பை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு படத்தை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மும்பையில் உள்ள சினிமா தணிக்கை குழுவினருக்குதான் உண்டு.

இதில் நாங்கள் தலையிடுவதற்கு எதுவுமில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், இந்த வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of