வெளிநாடு பயணத்தை முடித்து அருண் ஜெட்லி வீட்டிற்கு செல்கிறார் மோடி

239

வெளிநாடு பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் மோடி மறைந்த பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜெட்லி வீட்டிற்கு இன்று செல்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கடந்த வாரம் காலமானார். அவரது மறைவின் போது பிரதமர் மோடி மூன்று நாடுகள் பயணமாக வெளிநாடு சென்றிருந்ததால், ஜெட்லியின் உடலுக்கு பிரதமர் மோடியால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்ட நாடு திரும்பியுள்ள பிரதமர் மோடி, இன்று காலை அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

முன்னதாக அருண் ஜெட்லியின் இழப்பு பேரழிப்பு என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of