மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கௌரவம்..! மூக்கறுப்பட்ட பாகிஸ்தான்..!

868

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஒரு சிலர் இந்த முடிவு சரி, இதனால் நாட்டிற்கு நல்லது தான் நடக்கும் என்றும், ஒரு சிலர் இந்த முடிவு காஷ்மீர் மக்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது.

அவர்களின் வாழ்க்கையை புரிந்துக்கொண்டவர்களால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்காது என்று கருத்து தெரிவித்தனர். இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தந்த நிலையில், பாகிஸ்தான் மட்டும் கடுமையாக எதிர்த்து ஐநா சபை வரை சென்றது.

அங்கு இன அழிப்பு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் தரப்பில் குற்றம்சாட்டப்பட்து. இந்நிலையில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் ஐக்கிய அரபு அமீரகம், நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் சையது என்ற விருதை அளித்துள்ளது.

இந்த விருது அளிக்கப்பட்டதால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் இல்லை என்ற குறியீடை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement