விவசாயம், பொருளாதாரம் என அனைத்திலும் பிரதமர் மோடி அரசு தோல்வி

863

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பணமதிப்பிழக்கம் மற்றும் அவசரமாக கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. நடைமுறையால் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்ற பாரதிய ஜனதா அரசு அதனை நிறைவேற்ற தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். விவசாயிகள் பிரச்சனை, பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடனான நட்புறவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டதாக கூறினார்.

விவசாய பொருட்களுக்கு இதுவரை லாபகரமான விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மந்தமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், மேக் இன் இந்தியா திட்டம் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

Advertisement