மோடி அரசு படுதோல்வி ? – பிரியங்கா

238
priyanka13.2.19

வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. அதன்பின்னர், காந்தி நகரில் உள்ள அடலஜ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.

அவர் கூறுகையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் “மோடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது”. வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மக்கள் தங்களின் எதிர்காலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, விவசாயிகளின் எதிர்காலம் போன்றவை இந்த தேர்தலில் முக்கியமாக இருக்கும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.