மீண்டும் இவர் வந்தால் சர்வாதிகார ஆட்சி தான்.., மம்தா ஆவேசம்

504

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்காளம் மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கூச்பேஹார் மாவட்டத்தில் உள்ள மாதாபங்காவில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்,

மேற்கு வங்காளத்தில் குடியுரிமை சட்ட மசோதாவை அமல்படுத்த நாங்கள் விடமாட்டோம். நாட்டில் யார் வசிக்க வேண்டும், யார் வெளியேற வேண்டும் என்பதை மோடி உள்ளிட்ட யாரும் முடிவுசெய்ய முடியாது.

திருடு, கலவரம் செய், மக்களை கொல் ஆகிய மூன்று கோஷங்களை பிரதமர் மோடி எழுப்பி வருகிறார். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும். யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of