மோடி பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கி | Modi | Rahul Gandhi

158

அரியானா மாநிலத்தில் 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநிலத்தில் நேற்று தனது முதலாவது பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக திகழ்பவர் பிரதமர் மோடி. நாள் முழுவதும் அவர்களுக்காகவே அவர் பேசி வருகிறார். அவரை எப்போதும் டிரம்ப், அம்பானி போன்றவர்களுடன்தான் பார்க்க முடியும். விவசாயிகளுடன் பார்க்க முடியாது.

நரேந்திர மோடி, ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அதை தனது 15 பணக்கார நண்பர்களின் பாக்கெட்டில் போடுகிறார் என்று கூறினார்.