தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வைக்கிறார் – பிரதமர் மோடி

133

மேற்கு வங்காளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைக்க உள்ளார்.  மேற்குவங்கத்தின் துர்காபுர் டவுன் மற்றும் தாக்கூர் நகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

மோடியின் பொதுக்கூட்டம் நடைபெறும் தாக்கூர்நகர், மாத்துவா இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும்.மேற்கு வங்கத்தில் மாத்துவா இனத்தவர் 30 லட்சம் பேர் உள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் அளிக்கும் ஓட்டுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்து வந்துள்ளன. வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் 30 லட்சம் மாத்துவா இனத்தவர்கள்  உள்ளனர்.

இதே போன்று தொழில்நகரமான துர்காபுர் பகுதியில், தேர்தல் பிரசாரத்தையும் மோடி துவக்கி வைக்க உள்ளார்.