மாமல்லபுரத்தில் சந்திக்கும் மோடி – சீன பிரதமர்..?

320

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையேயான முதலாவது சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுகான் நகரில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது என இருநாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அதிபரை பிரதமர் மோடி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சந்திப்பு நடைபெறுவதால், இதற்கான ஏற்பாடுகளை சீன அதிகாரிகள் பார்வையிட்டு சென்றாக கூறப்படுகிறது.

மேலும் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய உளதுறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், சந்திப்பின் போது இருநாட்டு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களையும், வரலாற்று சின்னங்களையும் பார்வையிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of