விமான டிக்கெட்டில் மோடி படம்! தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை!

788

டெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்கிய விமான டிக்கெட்டில் பிரதமர் மோடி, குஜராத் முதல்- மந்திரி விஜய்ரூபானி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த டிக்கெட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

“அந்த டிக்கெட்டுகள் ஜனவரியில் அச்சிடப்பட்டவை. அதில் உள்ள மோடி, விஜய் ரூபானியின் படங்கள் இடம் பெற்ற விளம்பரம் அப்போது குஜராத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டுக்காக வெளியிடப்பட்டது.

3-வது நபர் அளித்த விளம்பரத்தின் அடிப்படையில் இந்த படங்கள் அச்சிடப்பட்டன. இந்த டிக்கெட்டுகள் குஜராத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வினியோகிக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தயா அந்த விமான டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of