கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய மோடி

383

வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு உதாரணமாக ராமர்கோயில் திகழும் என்று கம்பராமாயணத்தில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டி பூமிபூஜையில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்.

அயோத்தியில் ராமர்கோயில் பூமிபூஜை விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, சரயு நதிக்கரையில் பொன்னான வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

பல தலைமுறை மக்களின் போராட்டங்கள் தியாகங்களுக்குப்பிறகு  இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழில் கம்பர் எழுதிய ராமாயணத்தில் இருந்து மேற்கோள் காட்டி பிரதமர் பேசினார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு உதாரணமாக ராமர்கோயில் திகழும் என்றும் அவர் கூறினார். ராமராஜ்யமே மகாத்மா காந்தியின் கனவாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய கலாச்சாரத்தின் நவீன அடையாளமாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்றதீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டு அமைதிகாத்தது பெருமைக்குரிய நிகழ்வு என்றும் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.