மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா பின்னோக்கி செல்கிறது – ராகுல்காந்தி

197

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா பின்னோக்கி செல்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை வழிநடத்த சரியான தலைமையின்றி தத்தளிக்கும் சூழ்நிலையில், மத்தியில் ஆளும்கட்சியின் செயல்பாடுகளை ராகுல்காந்தி தவறாமல் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மோடி ஆட்சியால் இந்தியா மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதுதொடர்பாக 6 விசயங்களை பதிவிட்டுள்ளார்.

வரலாறு காணாத அளவு GDP சரிவு, 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை. 12 கோடி பேர் வலையிழந்த சோகம். மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மத்திய அரசு தரவில்லை. சர்வதேச அளவில் அதிகப்படியான வைரஸ் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள்  காணப்படுகிறது. நமது நாட்டின் எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் அத்துமீறல் என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.