காங்கிரஸ் செய்த பாவத்தில் இருந்து தப்பிக்க முடியாது.., மோடி ஆவேசம்

599

மத்தியப்பிரதேசம் மாநிலம், கன்ட்வா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

‘நாங்கள் செய்து முடித்துள்ள நல்ல காரியங்களை கூறி இந்த தேர்தலில் உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறோம். ஆனால், காங்கிரசும் அதன் கூட்டணி கட்சியினரும் தவறான தகவல்கள் மற்றும் தரமற்ற விமர்சனங்களுடன் எங்களை எதிர்கொள்கின்றனர்.

1984-ம் ஆண்டு நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை வெறியாட்டங்களை ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறுவதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனது நிஜமுகத்தை வெளிப்படுத்தி விட்டது.

இதே ‘நடந்தது, நடந்து விட்டது’ மனப்பான்மையில்தான் இதே மாநிலத்தில் முன்னர் நடந்த போபால் விஷவாயு தாக்குதலுக்கு காரணமான குற்றவாளி தப்பியோடவும் காங்கிரசார் துணை புரிந்தனர்.

நமது இந்து மதத்தின் பாரம்பரியத்தை இழிவுப்படுத்துவதற்காக ‘இந்து பயங்கரவாதம்’ என்ற சதி திட்டத்தை காங்கிரஸ் அப்போது உருவாக்கியது. ஓட்டுவங்கி அரசியல் என்னும் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினரும் அவர்களுடன் இணைந்திருக்கும் மெகா கூட்டணிகளும் எத்தனை பூணூல்களை காட்டினாலும் இந்து மதத்தின் நிறமான காவியில் பயங்கரவாத கரையை படியவிட்ட பாவத்தில் இருந்து அவர்கள் ஒருநாளும் தப்பிக்கவே முடியாது’ என இந்த கூட்டத்தில் பேசிய மோடி குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of