மோடி ஷேர் செய்த டுவிட்.., இதுல என்ன உள்குத்து இருக்கும்?

408

நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலானது வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதுவும் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி எல்லோருக்கும் தனது வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து இருந்தார்.

குஜராத் தேஷ் என்ற டிவிட்டர் பக்கம் வெளியிட்டு இருந்த சிங்கத்தின் புகைப்படம் ஆகும். இதனை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்து இருந்தார்.

பிரதமர் மோடி ஷேர் செய்திருந்த புகைப்படத்தில் ஒரு சிங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தின் கிர் காட்டில் இருக்க கூடிய சிங்கம் அது. மரத்தின் மேல் அந்த சிங்கம் அமர்ந்து இருந்தது. இதை லவ்லி புகைப்படம் என்று மோடி ஷேர் செய்து இருந்தார்.

மோடி, ஒரு சிங்கத்தின் புகைப்படத்தை எல்லாம் இப்படி ஷேர் செய்வது இதுவே முதல்முறையாகும். சரியாக தேர்தல் அறிவித்த மறுநாளே மோடி இதை ஷேர் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்ற பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஆனால் இதற்கான உண்மையான காரணம் என்னவென்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.