ஏழைகளின் வங்கிக்கணக்கில் 31 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது – மோடி

274

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“ஊரடங்கு தளர்வுகள் 2.0 என்ற நிலைக்கு தற்போது நாம் முன்னேறி வந்துள்ளோம். இந்திய மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

ஊரடங்கு காரணமாக, கொரோனா பரவலும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது, கூடுதல் கவனத்துடன் மக்கள் இருக்க வேண்டியது அவசியம். சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

ஊரடங்கு விதிகளை மீறி செயல்படுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டியது அவசியம். மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்;தியாவி;ல் நிலைமை சீராகவே உள்ளது.

தற்போது வரஇருக்கும் காலங்களில் சளி காய்ச்சல் வரும் என்பதால், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோன ஊரடங்கு விதிகளை ஒரு நபர் மீறுவது கோடிக்கணக்கான மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு சமம்.
கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் தற்போது நாம் எடுக்கும் நடவடிக்கை தான் எதிர்காலத்தையே தீர்மாணிக்கப்போகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு உதவுவதற்கு, 1.75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஏழைகளின் வங்கிக்கணக்கில் 31 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், சுமார் 80-கோடி மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா மக்கள் தொகையை பொறுத்தவரையில், இந்தியாவில் இரண்டு மடங்கு மக்கள் பலன் அடைந்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. முன்னர் இருந்தது போல, மாஸ்க் அணிவது உள்ளிட்ட விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாள்தோறும் பலமுறை 20 விநாடிகளுக்கு மேல் கைகழுவும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். ஏழை மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை, மத்திய அரசின் நடவடிக்கைகளால் தவிர்க்கப்பட்டது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of