கொரோனா தடுப்பூசி.. நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி

690

டெல்லியில் நடைபெற்றுவரும் குளோபல்வீக் – இந்தியா இணையவழி மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்.

முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ள இந்த மாநாட்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள தொழில்நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு  பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

மக்களின் ஆரோக்கியத்தில் கொண்டுள்ள அக்கறையைப்போல, பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ளோம் என்று பிரதமர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வில் இந்திய விஞ்ஞானிகளும் முக்கியப்பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார்.

உலக அளவில் பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கையில் இந்தியா முக்கியப்பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். கொரோனாவுக்கு எதிரான வலுவான யுத்தத்தை இந்தியா நடத்திவருகிறது என்றும் அதில் வெற்றிபெறுவோம் என்றும் பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of