மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

1804

இந்தியாவில் பெருந்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரசிற்கான மருந்து தயாரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி பொதுமக்களிடம், தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், உலகளவில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் இறப்பு விகிதம் மிகக்குறைவு என்றும், சிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், பொது முடக்கம் முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கூறிய அவர், பண்டிகை காலத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisement