மீண்டும் தமிழ் பாரம்பரியத்திற்கு மோடி புகழாரம்..! இந்த முறை எந்த விஷயம்..?

1789

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம், மக்களிடையே பேசி வருகிறார். அந்த வகையில், செப்டம்பர் மாதத்திற்கான நிகழ்ச்சிக்காக, மோடி இன்று மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது, தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலையைப் பற்றி பேசினார். தமிழகத்தின் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது என்றும், கதை சொல்வது ஒரு அற்புதமான கலை என்றும் கூறினார்.

மேலும், பஞ்சதந்திர கதைகள் போன்றவை இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்திற்கான நிகழ்ச்சியின்போது, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பற்றி மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.