இந்தியா சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது

213

வைரஸ் தொற்று தடுப்புப்பணியில்  இந்தியா சரியானதிசையில் சென்று கொண்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் வைரஸ் தொற்றுநோய் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி இன்று தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்தக்கூட்டத்தில் பேசிய பிரதமர், இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்துவருவது அனைத்து மாநிலங்களும் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைந்துவருவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவர்களும், சுகாதாரப்பணியாளர்களும் ஒவ்வொருநாளும் புதிய சவாலை எதிர்கொண்டு வருகிறார்கள்  என்றும் பிரதமர் நரேந்திரமோடி கூறினார். வைரஸ்  பரவலை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் முக்கியமானது என்றும் பிரதமர் தெரிவி்த்தார்.

உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ்தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டதற்கு மாநிலங்களின் ஒத்துழைப்பே காரணம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.