“அது மட்டும் அவர் வாயில இருந்து வரவே இல்லையே..” – சுதந்திர தினவிழாவில் மோடியின் உரை..!

636

ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து  1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் பாகிஸ்தானைப் பற்றியோ, பாகிஸ்தான் தொடர்பான வார்த்தைகளை பற்றியே ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆனால் பாகிஸ்தானின் சுதந்திர விழா கடந்த 14-ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் இம்ரான்கான், இந்தியாவை பற்றியும், காஷ்மீரை பற்றியும் மட்டுமே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

பாகிஸ்தானை பற்றி பேசியதைப் விட, காஷ்மீர் பற்றியும், இந்தியாவை பற்றியும் தான் நீண்ட நேரம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement