அரசாங்கத்திடமே எல்லாத்தையும் எதிர்பார்ப்பீங்கலா! – மோடி!

454

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மோடி, மக்களை பார்த்து, அனைத்துப் பணிகளையும் அரசே செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர், அதுபோல எந்தப் பணிகள் முடிவு பெறாமல் உள்ளதோ, அது குறித்தே கேள்வியை எழுப்பி, தங்களிடம் இருந்து பதிலையும் எதிர்பார்க்கின்றனர்.

இதுபோன்ற வழங்கங்கள் முன்பு இருந்ததில்லை, ஆனால் தற்போதுதான் இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.

அந்த காலங்களில் மக்களே அரசை எதிர்பார்க்காமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே, விருந்தினர் மாளிகை, கோ சாலைகள், குளங்கள், நூலகங்கள் அமைத்தனர்.

ஆனால், தற்காலங்களில், அதுபோன்ற உதவிகள் குறைந்து விட்டதால் அரசு நிர்வாகமே இவற்றைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

நிர்வாகப் பொறுப்பை அரசும், அதற்கான அதிகாரத்தை சமூகமும் எடுத்துக் கொண்டால் அதிக அளவில் நலத்திட்ட உதவிகளை மக்களுக்குச் செய்ய முடியும்.
இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of