எனக்கு நாடாளுமன்றத்தின் அமைப்பு, செயல்முறை எதுவும் தெரியாது? மோடி உரை

441

16 வது மக்களவையின் கடைசி நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது முதலில் மக்களவையில் பணியாற்றிய அனைத்து எம்.பிக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதன் பின் தன்னுடைய உரையை தொடங்கிய மோடி சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் முதன் முறையாக ஆட்சி அமைத்தது.

நான் கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வென்று முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த போது எனக்கு நாடாளுமன்றத்தின் அமைப்பு, செயல் முறை குறித்து எதுவுமே தெரியாது.

பின்பு தான் அனைத்தையும் புரித்து கொண்டு நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் 100 சதவீதத்திற்கும் மேலாக உழைத்து வருகிறேன். கடந்த காலங்களை விட இப்போது பெண்கள் நாடாளுமன்றத்தில் அதிக பிரதிநிதித்துவத்தை அளித்துள்ளனர்.

எங்களின் சாதனையாக உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாகியுள்ளோம். இதனால், 5 லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது.