“பெரிய கேக் இருந்தா தான் பெரிய பீஸ் கிடைக்கும்!” பட்ஜெட் குறித்து மோடி பேச்சு!

533

இந்தியாவின் 2-வது பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், நேற்று 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தமிழிசை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு பிரதமர் மோடி வருகை தந்து, பாஜக உறுப்பினர் சேர்க்கை திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

“கேக்கின் அளவு என்பது முக்கியம் என ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று கூறுவார்கள்.

அதற்கு என்ன பொருள் என்றால் கேக்கின் அளவு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அதற்கேற்ப தான் அதனை கட் செய்து கொடுத்தால் மக்களுக்கு பெரிய கேக் துண்டுகள் கிடைக்கும் என்பதாகும்.

அது போல தான் பொருளாதாரம் எவ்வளவு உயருகிறதோ, மக்களும் அந்த அளவுக்கு பலன் பெறுவார்கள்.

எனவே தான் நாங்கள் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.