பொதுக்கூட்டத்தில் குறைவான மக்களே நிற்க முடிகிறது! புலம்பித்தள்ளிய மோடி!

753

பாஜக கட்சி தேர்தலில் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி கடந்த ஒருவாரமாக தீவிரமாக நாடு முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் மேற்கு வங்கத்தில் கூச் பெஹார் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

இந்த பிரச்சாரத்தில் அவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் பேசியது பின்வருமாறு:-

“பிரதமர் மோடி தனது பேச்சில், பாஜக பொதுக்கூட்டம் நடத்த சிறிய இடம் மட்டுமே அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் பாஜக நடத்தும் கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இப்போது இருக்கும் இடத்தில் குறைவான மக்களே நிற்க முடிகிறது. மம்தா பானர்ஜியை ஆட்சியில் இருந்து அகற்ற இந்த மக்கள் உறுதியேற்றுவிட்டார்கள்.

பெரிய இடம் கொடுத்து இருந்தால் நிறைய பேர் இருந்திருப்பார்கள். நாங்கள் யாராலும் நினைக்க முடியாத விஷயங்களை செய்து இருக்கிறோம். பாஜக செய்த பல விஷயங்கள் பலரால் கொஞ்சம் கூட நினைக்க முடியாதது.

பாகிஸ்தானுக்கு நமது அரசு திருப்பி பதிலடி கொடுக்கும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் அதை நிகழ்த்திக் காட்டினோம். பாகிஸ்தானை வலுப்படுத்தியது காங்கிரஸ்தான். அவர்கள் ஆட்சியில்தான் பாகிஸ்தான் வலுவான நாடாக மாறியது.

இதோ இப்போது காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த கோரிக்கைக்கு மமதா பானர்ஜியும் ஆதரவு அளிக்கிறார் என்பது வருத்தமாக இருக்கிறது.”

என்று மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.