அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்.., அவை என்ன?

703

பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்படர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.

அப்போது அவரை முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால், தம்பிதுரை, பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து காரின் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழா மேடைக்கு வருகை தந்தார்.

அதன் பின்பு காணொலி காட்சி மூலம் பல அரசு நலத்திட்டங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அவர் தொடங்கிவைக்கப்பட்ட அரசு திட்டங்கள் பின்வருமாறு, 

  • பாம்பனில் ரூ.250 கோடியில் புதிய பாலம், ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே (17.20கி.மீ) ரூ. 208 கோடியில் புதிய ரயில் பாதை,
  • மதுரை – சென்னை எழும்பூர் தேஜஸ் ரயில் சேவை, மதுரை – செட்டிகுளம்,
  • செட்டிகுளம் -நத்தம் நான்குவழிச்சாலை திட்டம்,
  • குமரியில் சாலைப் பாதுகாப்பு பூங்கா மற்றும் போக்குவரத்து அருங்காட்சியகத் திட்டம் ஆகியவற்றை தொடங்கிவைத்தார்.
  • அதுமட்டுமின்றி, மதுரை – ராமநாதபுரம் நான்குவழிச் சாலை, குமரி மாவட்டம், மார்த்தாண்டம்,
  • பார்வதிபும் மேம்பாலங்கள்,
  • பணகுடி- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட சுமார் ரூ.40 ஆயிரம் கோடியிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.
Advertisement