அத்வானியின் கருத்து! மோடி என்ன சொன்னார் தெரியுமா?

700

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாளையொட்டி பாஜக மூத்த தலைவர் அத்வானி, தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில்,

“எதிர்கருத்து கொண்டவர்களை பாஜக தேசதுரோகிகளாக பார்க்கவில்லை என்றும், மக்கள் நலன் முதலில், கட்சி நலன் இரண்டாவது, தனிப்பட்ட நலன் கடைசி தான்” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அத்வானி கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று இரவே அவசரமாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.

அதில் அவர் கூறுகையில்,

“பாஜகவின் உண்மை கொள்கையைத்தான் அத்வானி பிரதிபலித்துள்ளார். தேசம் முதலில், கட்சி இரண்டாவது, தனிமனித நலம் கடைசியில்தான். பாஜகவின் தொண்டராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். எல்.கே.அத்வானி போன்ற சிறந்த தலைவர்களால் கட்சி வலுப்பெற்றதை நினைத்து பெருமையடைகிறேன்.”

இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அத்வானி கோபத்தில் இருக்கிறார் என்று பரவிய செய்திகளுக்கு அணைபோட முயன்றுள்ளார் மோடி.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of