மோடி கையில் வைத்திருக்கும் அந்த கருவி என்ன..? மோடி கொடுத்த விளக்கம்..!

924

சீன அதிபர் ஷி ஜின்பிங்க் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சந்திப்பதற்காக மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்தனர். இந்த சந்திப்பையடுத்து, அடுத்த நாள் பிரதமர் மாமல்லபுர கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த குப்பைகளை அகற்றினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் விமர்சித்தும் இருந்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோவில், மோடியின் கையில் கருவி ஒன்று இருந்தது. மோடியில் கையில் இருந்த அந்த கருவி என்ன என்று இணையத்தில் பெரும் விவாதமே நடந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், தாம் கையில் வைத்திருந்த பொருள் தொடர்பாக நேற்று முதல் பலரும் கேட்டிருந்ததாகவும், அது அக்கு பிரசர் உருளை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், அக்குபிரசர் உருளையை தாம் அடிக்கடி பயன்படுத்துவதாவும் அவர் தெரிவித்தார்.

Advertisement