முத்தலாக் தடை மசோதா..,! குப்பையில் வீச வேண்டும்..! மோடி போட்ட அதிரடி டுவீட்..,!

899

பெண்களிடம் தலாக் என்று 3 முறை கூறிவிட்டால் விவாகரத்து பெற்று விடலாம்  என்று ஒரு பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஆனால் இந்த தலாக் முறையில் 3 முறை சொல்லப்படும் இந்த வார்த்தைகளுக்கு ஒவ்வொரு  தலாக் என்ற வார்த்தைக்கும் இடையில் நீண்ட கால இடைவேளை உள்ளது என்பது இஸ்லாமிய அடிப்படை.

இது தெரியாமல் ஒரு சிலர் 3 முறை தலாக்-ஐ ஒரே நேரத்தில் சொல்வது இஸ்லாமிய மதத்தில் அனுமதி இல்லை அது முற்றிலும் தவறானது என இஸ்லாமிய மதபோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இந்த முறைக்கு மத்திய அரசு தடை விதித்து, மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, அதிக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்ததன் மூலம் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“ஏற்றுக்கொள்ளப்படாத ஆதி கால செயல்களை குப்பையில் வீச வேண்டும். கடைசியில் அது நடந்துவிட்டது. இஸ்லாமிய பெண்களுக்கு வரலாற்று ரீதியாக செய்யப்பட்ட தவறுகளை தற்போது பாராளுமன்றம் சரி செய்துள்ளது.

பாலின சமத்துவத்திற்கான வெற்றி இது. முத்தலாக் சட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement