அதுக்காக தான் எல்லோரும் வெயிட்டிங்..! ‘விக்ரம்’ பற்றி மோடி பேச்சு..!

715

இஸ்ரோவின் தீவிர முயற்சியின் மூலம் சந்திரயான்-2 வின்கலம் தயார் செய்யப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. இந்த வின்கலம், நாளை அதிகாலை 1லிருந்து 2மணி வரை நிலவின் தென்துருவப்பகுதியில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்த நிகழ்வை பெங்களுரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து காணவுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“சந்திராயன் 2 நிலவில் இறங்கும் தருணத்திற்காக 130 கோடி இந்தியர்களும் ஆர்வத்துடன் இங்கே காத்திருக்கிறார்கள்.

இன்னும் சில மணி நேரங்களில் சந்திரயான்- 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.”

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement