பிரதமர் மோடி..! கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்..! அதிர்ச்சி தகவல்..!

575

கடந்த சில மாதங்களுக்கு முன் பிட்காயின் பரிவர்த்தனைக்காக அமெரிக்காவில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் narendiramodi_in என்ற டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் திடீரென முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிட்காயின் எனப்படும் ‘டிஜிட்டல் கரன்சி’ மற்றும் ‘கிரிப்டோ கரன்சி’ எனும், கணினி வழி பணப் பரிவர்த்தனை செய்யும் கும்பல் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை முடக்கியதன் பின்னணியில் இருந்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவலை உறுதி செய்த டுவிட்டர் நிர்வாகம், மோடியின் டுவிட்டர் கணக்கை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.