டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி – ராகுலை சாடுகிறாரா?

324

கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று அனைத்துக் கட்சிகளும் நீட்டி முழக்கியபோது பாஜகவும் மோடியும் மக்களையும் அவர்களின் பணத்தையும் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக இருப்போம் என்று கூறியிருந்தார்கள்.

இது அப்போது அனைத்து சமூக வலை தளங்களிலும் பெரிய வெற்றியை பெற வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஃபேல் போர் விமான பிரச்சனையில் இந்நாட்டின் பாதுகாவலரே பெரிய திருடனாக உள்ளார் என்று ராகுல் குறிப்பிட்டார்.

ரஃபேல் ஊழல் குறித்து விமர்சித்த ராகுல் தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இந்த ஹேஷ்டேக் உலகம் முழுவதும் டிரென்ட் ஆனது. இது பாஜகவுக்கு கடும் கோபத்தை கிளப்பியது.

இதனையடுத்து இதையே இந்த தேர்தலின் பிரச்சாரமாக முன்னெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி உங்களுடைய பாதுகாவலனாகிய நான் உறுதியாக நின்று நாட்டுக்கு சேவை புரிந்து வருகிறேன். ஆனால் ஊழலுக்கு எதிராகவும், தீய செயல்களுக்கு எதிராக போராடும் நாட்டு மக்கள் அனைவருமே இந்த நாட்டின் பாதுகாவலர்கள்தான் என்று பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் தேசத்தின் பாதுகாவலர் தான் மட்டுமல்ல இந்நாட்டில் அனைவருமே என்று உணர்த்துகிறார் மோடி. அதாவது ராகுலின் விமர்சனம் தன்னை மட்டும் குறிப்பிட்டபோது அதை புத்திசாலித்தனமாக இந்நாட்டின் அனைவருமே பாதுகாவலர்கள் என்று அனைவரையும் இந்த வட்டத்திற்குள் இழுத்து விட்டுள்ளார் மோடி.

modi chowdikar

அதோடு மேற்கண்ட பதிவின் முடிவில் நானும் தேசத்தின் பாதுகாவலனே என்ற உறுதி மொழியையும் எடுக்குமாறு மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில்தான் தனது டிவிட்டர் அக்கவுண்டின் பெயரை சவ்கிதார் நரேந்திர மோடி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.

சவ்கிதார் என்ற ஹிந்தி சொல்லுக்கு பாதுகாவலர் என்பது பொருள். மோடி தனது கணக்கின் பெயரை மாற்றியதை அடுத்து பாஜக தலைவர்களான அமித்ஷா, பியுஸ் கோயல் உள்ளிட்ட பலரும் தங்களது டிவிட்டர் கணக்கின் பெயரை சவ்கிதார் என்ற அடைமொழியோடு மாற்றம் செய்து வருகின்றனர்.

இப்படி டிவிட்டரில் மட்டுமல்லாது கஜா புயல், ஒகி புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் வரும்போதும் நாட்டின் பாதுகாவலர்கள் அதை முன் கூட்டி கணித்து நாட்டு மக்களை பாதுகாப்பதோடு, மனித மற்றும் தொழில்நுட்ப சக்திகளை மீறி இயற்கை நம்மை தாக்கும்போது குறைந்த பட்சம் இந்த தேசத்தின் பாதுகாவலர்கள் மக்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்றவாவது வர வேண்டும் என்று இந்த நாட்டு மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

இந்த அபலக் குரல்கள் தேசத்தின் பாதுகாவலர்களின் காதுகளுக்கு போய் சேருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of