ஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,! கெத்து காட்டிய மோடி..!

455

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். டிஸ்கவரி சேனலின் முக்கியமான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் வரும் பியர் கிரில்ஸ், காடுகள், பள்ளத்தாக்குகள், குளிர் பிரதேசங்கள் போன்றவற்றில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து எப்படி வெளியேறுவது என்பது குறித்து பேசியிருப்பார்.

இந்த நிகழ்ச்சியில் சில நேரங்களில் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவும் கலந்துக்கொண்டிருந்தார். அந்த வகையில் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, பியர் கிரில்சுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில் டிஸ்கவரி தெற்கு ஆசிய நிர்வாக இயக்குனர் மேகா டாடா, மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் மோடியின் எபிசோட் செய்த சாதனை குறித்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“61 லட்சம் பார்வையாளர்களை கொண்ட டிஸ்கவரி சேனலில், ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை இதுவரை அதிகபட்சமாக 37 லட்சம் பேர் தான் பார்த்துள்ளனர்.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை இதுவரை இல்லாத சாதனை அளவாக 1½ கோடி பேர் பார்த்துள்ளனர்.

அதோடு அந்த குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தவர்களில் 93 சதவீதம் பேர் (சேனல் ஷேர்) டிஸ்கவரி சேனலை பார்த்துள்ளனர்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of