ரசிகர்களை பயமுறுத்திய முகமது சமி..!

1462

பெருந்தொற்று காரணமாக, இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக, முகமது சமி விளையாடி வருகிறார்.

அருமையாக பந்து வீசும் இவர், நன்றாக ஃபீல்டிங் செய்யக்கூடியவரும் ஆவார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், கப்பிங் தெரபிக்கு பிறகு மிகவும் இதமாக இருக்கிறது என்றும் கேப்சன் அளித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில், அவரது முதுகு வீக்கியிருப்பதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

கப்பிங் தெரபி என்பது, பழங்காலங்களில் இருந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கப்பிங் தெரபியை எவ்வாறு செய்கிறார்கள் என்றால், முதலில் அந்த தெரபிக்கொன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கப்களை உடலில் வைப்பார்கள்.

பின்னர், அந்த கப்களின் மேல்புறத்தில் உள்ள சிறிய துளை வழியாக, ஒரு கருவி மூலம் காற்றை உறிஞ்சி எடுப்பார்கள். இதன்மூலம், நம் முதுகில் உள்ள சதைப்பகுதி குண்டாக வீங்கும். இந்த தெரபி செய்தால், ரத்த ஓட்டம் சீராகுதல், உடல் இளைபாறுதல், உடல் வலி குறைதல் என பல்வேறு நன்மைகள் உள்ளது.