“நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..

515

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, நாளை இரவு 9 மணிக்கு, வீட்டில் உள்ள மின் விளக்குகளை அனைத்து விட்டு, டார்ச் லைட் ஏற்றி வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மோடியின் பேச்சு, வேலைக்காரன் திரைப்படத்தில் கூறியதைப்போன்று உள்ளது என நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், வேலைக்காரன் படத்தின் இயக்குநர் மோகன் ராஜா இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் போட்டுள்ளார்.

அதில், “ஆமாம், நாம் அனைவரும் இந்த நெருக்கடியான நேரத்தில், சிறந்த தீர்வை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கண்டிப்பாக இதில் இருந்து மீண்டு வருவோம்.

தற்போதைய உடணடி தீர்வாக இருப்பது, மக்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை விதைப்பது தான்.

அதற்காக தான் நமது பிரதமர் நரேந்திர மோடியும், விளக்குகளை ஏற்றச்சொல்லி தெரிவித்திருக்கிறார்.

மேலும், வேலைக்காரன் படத்தில் இடம்பெற்ற அந்த காட்சியை நினைவுப்படுத்தியதற்கு நன்றி.”

இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of