மோமோ விளையாட்டு பெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருக்க காவல்துறை எச்சரிக்கை

491

ப்ளூவேலை போன்று மோமோ விளையாட்டும் குழந்தைகள் மத்தியில் பெருகி வருவதால் பெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

புதுச்சேரி காவல் துறையின் குற்றம் மற்றும் புலனாய்வு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் சுபம் கோஷ், செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ப்ளூவேலை போன்று மோமோ விளையாட்டும் குழந்தைகள் மத்தியில் பெருகி வருவதால் பெற்றோர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மோமோ விளையாட்டை விளையாடும் குழந்தைகள், தனியாக இருக்க விரும்புவார்கள் என்று கூறினர். மேலும் அவர்கள் அடிக்கடி எரிச்சல் அடைவார்கள் என்றும் உடலில் காயங்கள் காணப்படும் என்றும் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of