மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரழிவு – சந்திரபாபு நாயுடு

523

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரழிவு என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் வேண்டும் எனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஒரு பேரழிவு என்றும், இது மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது எனவும் கூறினார்.

டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றம் என்பது சிறப்பானதுதான் என்றாலும், சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, நிதி வழங்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக கூறிய சந்திரபாபு நாயுடு, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எம்பிக்கள் கடுமையாக போராடியும் எவ்வித பயனும் இல்லை என்றும், மத்திய அரசு தொடர்ந்து இடையூறு கொடுத்து வருகிறது எனவும் கூறினார்.

புதிய தலைநகரான அமராவதியை கட்டமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது என்றும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் உயர் நீதிமன்றத்துக்கான கட்டிட பணி முடிவடைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of