2,464 கோடி பணம் பறிமுதல் – நாடு முழுவதும் பறிமுதல் வேட்டை தீவிரம்

241

நாடு முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரூ.2,464 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலையொட்டி, நாடு முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரூ.2,464.2 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பறக்கும் படை நடத்திய சோதனையில், இதுவரை ரூ.2,464.2 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ரூ.475.95 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of