10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 3 லட்சம் லாஸ்.. ‘பலே’ திருடர்களின் புது ஐடியா.. உஷார்..

618

சென்னை அடுத்த மேடவாக்கத்தில், 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் வந்துக்கொண்டிருந்தார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராமலிங்கம். அப்போது, சாலையில் 10 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்துள்ளது.

இதனைப் பார்த்த ராமலிங்கம், தனது கையில் இருந்த 3 லட்சம் ரூபாயை வண்டியின் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு, 10 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டிருந்தார். தரையில் இருந்த மொத்த 10 ரூபாய் நோட்டுகளையும் எடுத்துவிட்டு, வண்டியின் அருகில் வந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக்கிடந்தது.

அதாவது, ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பையில், பணம் இல்லை. அதற்கு பிறகே, தான் திருடர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமலிங்கம் பள்ளிக்கரனை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கைவரிசையில் ஈடுபட்ட திருடர்களை தேடி வருகின்றனர்.

தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் எவ்வளவு தான் மோசடி தொடர்பான செய்திகளை பார்த்திருந்தாளும், பணத்தின் மீதான பேராசை புத்தியை மழுங்கடிக்கும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.

Advertisement