12 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டும் தான்..? வங்கிகளின் அதிரடி முடிவு..!

1521

ஏடிஎம் மூலம் பணம் பறிக்கும் நூதன கொள்ளையர்களின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு ஒரு புறம் காவல்துறையினரும், மறு புறம் வங்கிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வங்கி ஏடிஎம்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்த வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஏடிஎம்களில் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாமா என்று பரிசீலிக்கப்பட்டது.

மேலும் ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த முறை பணம் எடுக்க குறைந்தபட்சம் 6 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை காத்திருக்க கட்டுப்பாடு விதிக்கலாமா என்றும் பரிசீலக்கப்பட்டது.

மேலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேலே பணம் எடுக்கும் போது ஒடிபி வசதியை அமல்படுத்தலாமா என்றும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்த ஒடிபி நடைமுறையை ஏற்கனவே கனரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.