குரங்கிற்கே கொரோனா பயம்..! வைரலாகும் வீடியோ..!

436

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுவரை, முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ், சானிடைசர் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், இதனை சிலர் பின்பற்றாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், குரங்கு முகத்தை துணியால் மறைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த குரங்கு கொரோனாவிற்கு பயந்து, கீழே கிடந்த துணியை முககவசமாக பயன்படுத்துகிறது என்று தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ, வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of