மான்ட்கார்லோ டென்னிஸ்.., கோப்பையை தன்வசமாக்கிய போக்னினி

186

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் போக்னினியும், செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சும் மோதினர்.

தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடிய போக்னினி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் கோப்பையை இத்தாலி வீரர் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of