மோடிக்கு ஆதரவாக முழக்கம்! தொழில்நுட்ப வல்லுநர்கள் கைது!

689

பெங்களூரு, நாகவரா பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மான்யதா தொழில்நுட்பப்பூங்கா.

இந்த வளாகத்தில் குறிப்பிட்ட சில தொழில்நுட்ப அறிஞர்கள், தொழில்முனைவோர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுடன் அத்துறை சம்பந்தமான பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, அவர்கள் தொடுக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நேற்று மாலை 5.30-மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொள்ள ஒருசிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இது பலரின் அதிருப்திக்கு காரணமாக அமைந்தது.

கலபுர்கியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, பெங்களூருவிலுள்ள மான்யதா தொழில்நுட்பப் பூங்காவுக்கு வருகை தந்த ராகுல் காந்தியை, அதிருப்தி அடைந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், பாஜகவினர் மீண்டும் மோடி என்று முழங்கி வரவேற்றனர்.

இந்நிலையில், ராகுல்காந்திக்கு எதிராக கோஷமிட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இதற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of