மேலும் 3 மாவட்டங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்..! ஆட்சியர்கள் அதிரடி..!

1137

தருமபுரி மாவட்டத்தில் வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். பொது இடங்களில் எச்சில் துப்பினால் சிறைத்தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் ஒருவரும், 4 சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் முககவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.

இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியில் வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தவறினால் 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய  மாவட்டங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 மாவட்டங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement