கொரோனா கொடூரம் – 5 லட்சத்து 85 ஆயிரம் பேர் பாதிப்பு

186

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 18 ஆயிரத்து 653 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரேனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரத்து 493-ஆக அதிகரித்துள்ளது.  510 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் இதுவரை 17 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்த நிலையில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 979 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 7 ஆயிரத்து 855 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 90 ஆயிரத்து 911 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் நேற்று முன்தினம் வரை 3-வது இடத்தில் இருந்த தமிழகம் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 90 ஆயிரத்து167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 87 ஆயிரத்து 360 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2 ஆயிரத்து 742 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 58 ஆயிரத்து 348 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of