மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்

415

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த 75 பேரில் 74 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றும்  தெரிவித்தார்.

தற்போது வரை மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 264 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 234-ல் இருந்து 309 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of