10 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் பார்லே பிஸ்கட் நிறுவனம் | Parle

413

இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே 10 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருளாதார மந்த நிலையின் எதிரொலியாக பல்வேறு துறைகளும் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகின்றன.

தற்போது நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது என அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

parle

பிஸ்கட் விற்பனை குறைந்துள்ளதால் உற்பத்தியையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 8000 முதல் 10000 ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளது என பார்லே நிறுவன அதிகாரி மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.

Parle-Biscuits

நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அரசு உடனே தலையிடவில்லை என்றால் நாங்கள் அவர்களை பணியிலிருந்து அகற்ற வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1929ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட பார்லே நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். நாடு முழுக்க அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 10 உற்பத்தி மையங்களும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் மேலும் 125 உற்பத்தி மையங்களும் உள்ளன.

packing

கடந்த வாரம் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வருண் பெர்ரியும் தமது நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது பற்றி கவலை தெரிவித்திருந்தார். வாடிக்கையாளர்கள் 5 ரூபாய்க்குக் கிடைக்கும் பிஸ்கட்டைக்கூட வாங்குவதற்குத் தயங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.5 ரூபாய் பிஸ்கட் வாங்குவதற்கு ஒரு முறைக்கு இரு முறை யோசித்து வாங்கும் நிலை ஏற்பட்டிருப்பது, பொருளாதாரத்தில் தீவிர பிரச்சினையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது என்றார்.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Sss Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Sss
Guest
Sss

Its not due to weaker economy, but due to awarness among ppl of eating busicuuts. Ppl started preparing everything healthy in home, and purchasing healthy products in market