வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்கள் பலரிடம் பத்து கோடி ரூபாய்க்கு மேல் மோசடி

322
fraudulent

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் பலரிடம் பத்து கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சென்னை அண்ணா சாலையில் zone tech solution என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் 10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞர்கள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிறுவனம் 150க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.