இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம்

632

இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதுச்சேரி மனநல திட்ட அதிகாரி ஜவஹர் கென்னடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் தேசிய மனநல திட்டத்தின் சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மனநல திட்டத்தின் அதிகாரி டாக்டர் ஜவஹர் கென்னடி தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் ஏராளமான மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய ஜவஹர் கென்னடி, இந்தியாவிலேயே புதுச்சேரியில் தான் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் தற்கொலை எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி முக்கிய வீதகள் வழியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of