தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும்

812

கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லையில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்ப கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவது குறித்து முன்னணி தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மணிகன்டன், கே.பி.அன்பழகன், தங்கமணி மற்றும் முன்னணி தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொறியல் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்க தொழில் தொடங்குபவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.

புதிதாக தொழில் தொடங்கினால் இரண்டு ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை மின் கட்டணம் இலவசம், ஒற்றைச்சாளர முறையில் தகவல் தொழில் நுட்ப தொழில் தொடங்க உடனடி அனுமதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of